மலேசியாவில் வாழும் 78 வயதான லைவ் தௌ [Liew Thow] என்ற மனிதரை "மனித காந்தம் " எனவும் ,"Mr . காந்தம் [Magnet ]"
எனவும் மக்கள் அழைகின்றனர் . ஏனெனில், அவர் எந்த இரும்பு பொருளையும் தனது
உடம்பில் ஓட்ட வைக்கும் ஆற்றலை பெற்றவர் . இரண்டு கிலோ [2 Kg ] வரையிலான
பொருள்களை அவர் அசாத்தியமாக தனது உடம்பில் ஓட்ட வைத்து மக்களை பிரமிப்பு
அடைய செய்கிறார்.
இவர் ஒரு அறிவியல் அதிசயமாக உள்ளார் . இவரது உடம்பில்
எந்த விதமான மின் காந்த அலைகளும் இல்லை என்று இவரை ஆராய்ந்த பல
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் .இவரது தோலானது மிகவும் சாதரணமாகத்தான் உள்ளது ,
எந்த வித்தியாசத்தையும் கண்டு பிடிக்க இயலவில்லை . விஞ்ஞான உலகிற்கு இவர்
இது நாள் வரை ஒரு பிடிபடாத புதிராகவே உள்ளார் .