Wednesday, January 8, 2014

வெற்றி நாயகன் புரூஸ் லீ

வெற்றி நாயகன் புரூஸ் லீ


புரூஸ் லீயின் செல்லப் பெயர் ஒரு பெண் பெயர் :

புரூஸ் லீயின் குடும்பத்தினர் அவரை ஒருபோதும் அவரை “புரூஸ்” என்று அழைத்ததில்லை. அவர்கள் அவரின் செல்லப்பெயர்களான ”லிட்டில் ஃபீனிக்ஸ்” (Little Phoenix), ”சாய் ஃபொன்” (Sai Fon) என்ற பெயர்களாலேயே அழைக்க விரும்பினர்.


அவர்களின் முதலாவது மகன் குழந்தைப் பருவத்திலேயே இறந்ததால், தீய சக்திகளுக்கு அவர்களது குடும்பத்து ஆண்குழந்தைகளை பிடிக்கவில்லை என அவரது பெற்றோர் நம்பினர். எனவே, புரூஸ் லீயை பெண் பெயரால் அழைத்தால் அத்தீய சக்திகளை முட்டாளாக்கி தமது மகனை அவற்றிடமிருந்து காப்பாற்ற முடியும் என்று நினைத்து அவரை அவ்வாறு பெண் பெயரால் அழைத்தனர். அவரது ரசிகர்கள் அவரை “லிட்டில் ட்ராகன்” (Little Dragon) என்று அழைத்தனர்.


உண்மையில், “புரூஸ்” என்பது சான் பிரான்சிஸ்கோவில் அவர் பிறந்த ஜாக்சன் தெரு மருத்துவமனை (Jackson Street Hospital) தாதியினால் இடப்பட்ட பெயராகும். தாதி, அமெரிக்க பிறப்பு  சான்றிதழில் ஏதும் குழப்பம் நேராதிருக்க குழந்தைக்கு ஆங்கிலப் பெயரைக் கொடுத்தார். (ஆம், புரூஸ் லீ  பிறப்பால் ஒரு அமெரிக்கன், அவர் வேறெந்த நாட்டு குடியுரிமையையும் கொண்டிருக்கவில்லை).

புரூஸ் லீ ஒருபகுதி ஜேர்மானியர் :

புரூஸ் லீ, சீன – ஜேர்மானிய கலப்பினத்தவராவார். அவரது தாய் வழிப் பாட்டனாரின் பூர்வீகம் ஜேர்மனி.


வெற்றி நாயகன் புரூஸ் லீ : 

புரூஸ் லீ தனது வாழ்க்கையில் ஒரேயொரு முறை மாத்திரமே சண்டையில் தோல்வியடைந்தார். அது அவருக்கு 13 வயதாக இருக்கும் போது. அந்தத் தோல்வியானது அவரை விங் சுன் (Wing Chun) எனப்படும் சீன தற்காப்புக்கலையை இப் மான் (Yip Man) என்பவரிடம் கற்றுக்கொள்ளத் தூண்டியது.


புரூஸ் லீ ஒரு தூய சீனர் இல்லை, ஜேர்மானிய கலப்பினத்தவர் என்பதை அறிந்து கொண்ட சக மாணவர்கள் அவரை தாங்கள் கற்கும் வகுப்பில் பயிற்சியளிக்க அனுமதிக்க மறுத்துவிட்டனர். Yip Man அவரிடமிருந்த திறமையையும் ஆர்வத்தையும் கண்டு அவருக்கு தனியாகப் பயிற்சியளித்தார்.


 மோசமான மாணவன் :

புரூஸ் லீ ஒரு மோசமான மாணவன்கல்வியில் புரூஸ் லீக்கு நாட்டமில்லை. அவ்வாறே கல்விக்கூடங்களும் அவரை விரும்பியதில்லை. புரூஸ் லீ பதின் பருவத்தில் இருக்கும் போது அவரது பெற்றோர் அவரை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஹாங்காங்கிற்கு அனுப்ப உத்தேசித்தனர். எப்போதும் தெருச்சண்டைகளில் ஈடுபட்டதே இம்முடிவுக்கு காரணம். ஆரம்பக் கல்வியின் பின்னர், ஹாங்காங்கிலுள்ள ஆங்கில ஆண்கள் பாடசாலையான லா சால்லே கல்லூரியில் ( La Salle College ) தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்கும் தனது விளையாட்டைத் தொடர்ந்தார் புரூஸ் லீ. இடைஞ்சலான நடத்தைக்காக லா சால்லேவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது பெற்றோர் அவரை வேறு பள்ளிக்கு மாற்றிய பின்னரும் அவர் தனது வீதிச் சண்டைகளை தொடர்ந்து கொண்டேதான் இருந்தார்.


நடனக் கலைஞர், குத்துச்சண்டை வீரர் :

எவ்வளவுக்கெவ்வளவு தற்காப்புக் கலைகளை கவனமாகப் பயின்றாரோ, அவ்வளவுக்கவ்வளவு நடனத்திலும் அவர் ஆர்வமாக இருந்தார். அவர் தனது 18 ஆவது வயதில் – 1958 இல், ஹாங்காங் சா சா சாம்பியன்ஷிப் (Hong Kong Cha Cha Championship) பட்டத்தை வென்றார். அவர் ஒரு பெரிய குத்துச்சண்டை வீரர் கூட. 1958 இல், குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (Boxing Championship) பட்டத்தை வென்றார் – நாக்அவுட் மூலம்.

தத்துவாசிரியர் : 

வெறும் வீரமும் முரட்டுத்தனமும் மட்டும் கொண்டவரல்ல புரூஸ் லீ. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், தற்காப்புக்கலை நுட்பங்கள், தத்துவக் கொள்கைகளை மையமாக கொண்டு தத்துவம் பயின்றார். அவர் அக்கல்லூரியில் தற்காப்பு கலைகள் கற்பித்தார். பின்னர், கல்லூரியைக் கைவிட்டு, தனது சொந்த தற்காப்பு கலை பள்ளியை ஆரம்பித்தார்.


 தரையில் காலால் உதைத்து, புரூஸ் லீயோடு சவால் விடலாம் :

புரூஸ் லீ மிகவும் பிரபலமான பின்னர், தங்களால் அவரை வெற்றி கொள்ள முடியும் என்று பலர் எண்ணினர். அவர்கள் அவரிடம் சென்று, தரையில் தங்கள் காலால் உதைத்து (சவாலுக்கு அழைத்து), அவரை தாக்க ஆரம்பித்தனர். அவரது பரவிய புகழானது, அவரைவிட தாங்கள் பலசாலிகள் என்பதை நிரூபிக்க பலரை ஈர்த்தது.

உறுதியும் வேகமும்1964 இல், கலிபோர்னியா லாங் பீச் (Long Beach) இல் ஒரு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிக்காக புரூஸ் லீ அழைக்கப்பட்டார். அங்கு அவர், அவரது பிரபலமான “ஒரு இன்ச் பஞ்ச்” (One Inch Punch) ஐ நிகழ்த்தினார். ஒரு அங்குல தூர இடைவெளியில் இருந்து அவர் கொடுக்கும் பாரிய அடியானது, எதிராளியை மறுபுறம் பறக்கச் செய்யும் வலிமையுடையது.

புரூஸ் லீ, “ஒரு இன்ச் பஞ்ச்” ஐ பிரயோகித்த பாப் பேக்கர் (Bob Baker) என்பவர் “நான் புரூஸ்லீயிடம், இந்த வகை பரிசோதனையை மீண்டுமொருமுறை செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டேன். அவர் என்னை கடந்த முறை குத்திய போது, வலி தாங்க முடியாமல் வேலைக்குச் செல்லாமல் நான் வீட்டிலிருக்க நேரிட்டது” என்று கூறினார்.

இறந்தும் நடித்த புரூஸ் லீ :

Game of Death திரைப்படம் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக புரூஸ் லீ  மரணத்தை தழுவினார். அப்போது படநிறுவனம் என்ன செய்தது தெரியுமா? அவர்கள் திரைக்கதையை  மாஃபியாவிலிருந்து தப்பிக்க புரூஸ் லீ இறப்பது போல் நடிப்பதாக மாற்றினார்கள். அவரது மரணச்சடங்கின்  உண்மையான காட்சிகளையும் எடுத்து படத்தை தயாரித்தார்கள்.


நன்றி : v4tamil

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்