Friday, January 10, 2014

நியூசிலாந்தில் திமிங்கலங்கள் சுட்டுக்கொலை

நியூசிலாந்தில் திமிங்கலங்கள் சுட்டுக்கொலை


உலகிலேயே அதிக கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குமிடமாக நியூசிலாந்து கடற்பகுதிகள் உள்ளன.

இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன் தினம் இரவு 39 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

நீண்ட துடுப்புகள் கொண்ட இந்த பைலட் திமிங்கலங்கள் கடலுக்குள் மீண்டும் திரும்பி செல்ல முடியாமல் தரையில் தவித்துள்ளன. இதில் 12 திமிங்கலங்கள் நேற்றுகாலை உயிரிழந்து கிடந்ததை கடல் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துள்ளனர். மற்ற உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 27 திமிங்கலங்களை கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர்.


ஆனால், காலம் கடந்துவிட்ட நிலையில் அந்த திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் கொண்டுசென்று அவர்களால் விடமுடியவில்லை. இதையடுத்து துடித்துக்கொண்டிருந்த அந்த 27 திமிங்கலங்களையும் சுட்டுக்கொல்ல தீர்மானித்தனர். இதையடுத்து கருணை அடிப்படையில் அவைகள் சுட்டுக்கொல்லப்பட்டன.

இந்த திமிங்கலங்களை மிகப்பெரிய அலை அடித்துவந்து கரையில் விட்டு சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.

1998-ம் ஆண்டும் 300 பைலட் திமிங்கலங்களும், 1918-ம் ஆண்டு சுமார் 1000 பைலட் திமிங்கலங்களும் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடும் மக்கள்

ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடும் மக்கள்


உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸை கொண்டாடுகின்றனர்.

ஆனால் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றும் பழமைவாத கிறிஸ்தவர்கள், ஜனவரி 7 ஆம் தேதி கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.

உக்ரைன், ரஷ்யா, ஜார்ஜியா, செர்பியா, ரோமானியா, அல்பேனியா மற்றும் பின்லாந்து நாடுகளில் உள்ள தேவாலயங்களில் ஜனவரி 7 ஆம் தேதி அன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் .











என்னை விட அழகா இருக்கியே! பொறாமையில் ஆசிட் ஊற்றிய பெண்

என்னை விட அழகா இருக்கியே! பொறாமையில் ஆசிட் ஊற்றிய பெண்


லண்டனில் சகதோழி ஒருத்தி தன்னை விட அழகாக இருந்த காரணத்தால், பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிழக்கு லண்டனை சேர்ந்த மேரி கோனி(வயது 21) என்ற பெண், தன்னுடன் பணிபுரியும் நயோமி ஓனி(வயது 21) என்ற பெண்ணின் மீது பயங்கர கோபத்தில் இருந்துள்ளார்.

இதற்கு காரணம் நயோமி, தன்னை விட அழகாக இருந்ததே.

இதனையடுத்து சதித்திட்டம் தீட்டி நயோமியின் மீது கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.


இதுகுறித்து கரேத பட்டர்சேன் என்ற வழக்கறிஞர் கூறுகையில், நயோமி ஒருநாள் நள்ளிரவில் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவளுடன் இருக்கும் மேரி கந்தக அமிலம் என்ற ஒருவகை ஆசிட்டை வீசியுள்ளார்.

இதனால் அலறி துடிதுடித்து போன நயோமி, ஒருமாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது நயோமியின் அவல நிலையை கண்ட பின், தன் செயலுக்காக மிகவும் வேதனைப்படுவதாக மேரி தரப்பில் கூறப்படுகிறது.

சூட்கேஸ் மூலம் அமெரிக்கா செல்லலாம்! பெண்ணின் பலே ஐடியா

சூட்கேஸ் மூலம் அமெரிக்கா செல்லலாம்! பெண்ணின் பலே ஐடியா


பெட்டியில் மறைந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்டார். 

அமெரிக்காவின் அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்த போது, அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது.


அதிலிருந்த கனமான சூட்கேஸ் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் பொலிசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்பெட்டியில் பல துணிகள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு மேலும் தீவிர சோதனையில் இறங்கியபோது பெண் ஒருவரின் உடல் இரண்டாக மடிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

பொலிசாரை கண்ட அப்பெண் எழுந்து உட்கார்ந்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குற்றத்திற்காக தாய்லாந்து பெண்ணையும், அந்த காரின் உரிமையாளரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை

பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை


விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

இது, கடந்த மாதம் 29-ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது.


2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்து செல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது.

அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எமன் ரூபத்தில் வந்த கொட்டாவி !!!

எமன் ரூபத்தில் வந்த கொட்டாவி !!!


சீனாவில் பலமாக கொட்டாவி விட்ட இளைஞரின் நுரையீரல் கிழிந்து பாதிப்படைந்த பரிதாமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சீனாவை சேந்தவர் ஓயூ(வயது 26), இவர் சின தினங்களுக்கு முன்பு காலையில் எழுந்த போது பலத்த கொட்டாவி விட்டார்.

இதன் பின்னர் அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது.

எனினும் அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் ஓயூவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரால் சுவாசிக்க முடியாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.


இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், இவரின் நுரையீரலின் காற்று பை கிழிந்து துளை ஒன்று ஏற்பட்டுள்ளது.

எனவே காற்றுப் பையிலிருந்து வெளியேறும் காற்று, உடலின் மற்ற பாகங்களுக்கு செல்வதால், அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் இயல்புநிலைக்கு திரும்புவதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா

ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா


வரலாற்றிலேயே இல்லாத அளவு மிக அதிகளவான குளிரில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.


அமெரிக்காவே உலக மக்களின் கண்களில் பெரும் காட்சிப் பொருளாக மாறி மாபெரும் ஐஸ் கட்டி நாடாக மாறிக் கிடக்கிறது.

எங்கு பார்த்தாலும் பனிக் கட்டிகள், ஐஸ் கட்டிகள், கடும் குளிர், பனிக் காற்று.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றை தாங்க முடியாமல் அமெரிக்கா நடுங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது, மேலிருந்து பெரும் சத்தத்துடன் விழும் தண்ணீர் தற்போது ஐஸ் கட்டியாக காட்சி தருகிறது.

கீழே பார்த்தால் ஐஸ் மலைகளாக மாறி நிற்கின்றது தண்ணீர் தடாகம்.

நயாகரா உறைந்து போயிருப்பதைக் காண கடும் குளிரையும், உயிர் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

1912ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இப்படி உறைந்துள்ளதாம்.




அதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)

அதிசயங்கள் நிறைந்த சாக்கடல் (Dead Sea)


சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?

சாதாரண கடல் நீரை விடஇங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது.


பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.

சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்? அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன.

ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம்,ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன. அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் உள்ளன.

நீரில் மிதக்க வேண்டுமானால் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இல்லையென்றால் ஏதாவது அதிசயங்களை நிகழ்த்த வேண்டும். இவை எதுவும் இல்லாமல் நீரில் மிதப்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். பார்ப்பதற்கு கடல் போல காட்சி அளிக்கும், ஆனால் உண்மையில் கடல் இல்லை… தண்ணீர் தான் ஆனால் குதிப்பவர்கள் நீருக்குள் மூழ்கமாட்டார்கள்.. இதுதான் Dead Sea என்று அழைக்கப்படும் சாக்கடலின் சிறப்பம்சம்.

உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும். கடல் மட்டத்தில் 378 மீட்டர் (1340 அடி) ஆழமானது. இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்புதான் சாக்கடல். உண்மையில் இது ஒரு கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோமீட்டர் நீளமும், 18 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது.

சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிகாமலேயே மிதக்க முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும், செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம்.

இந்த சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள்தான். சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு.

சாக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள மருத்துவகுணங்கள் தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். இதனாலேயே சாக்கடலுக்கு the lowest health spa மற்றும் நேச்சுரல் ஸ்பா (natural spa) என்ற பெயரும் உண்டு. உலகிலேயே மிக தாழ்வான பகுதி என்ற மற்றொரு சிறப்பும் சாக்கடலுக்கு உண்டு.

இத்தனை பெருமை கொண்ட சாக்கடலின் முக்கிய நீர் ஆதாரமான ஜார்டன் நதி நீரின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருவதால் இந்தக் கடலின் பரப்பு குறைந்து கொண்டு வருகிறது என்பதுதான் கவலையளிக்கும் செய்தி. ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.

கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக்குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்தவேண்டும்.

அமெரிக்கா நடுங்குவதற்கான காரணம் என்ன?

அமெரிக்கா நடுங்குவதற்கான காரணம் என்ன?


அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி மற்றும் குளிர் நடுக்கத்திற்கான காரணம் என்ன என்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் சிகாகோ உட்பட பல நகரங்கள் பனியில் உறைந்து விட்டன. வெப்பநிலை செல்சியஸ் மைனஸ் 51 டிகிரிக்கு கீழ் போய்விட்டது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளியே தலை காட்டவே இல்லை. விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.


பல இடங்களிலும் நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. குழந்தைகளை கண்டிப்பாக வெளியே வர அனுமதிக்க கூடாது என்று ஆங்காங்கு அறிவுறுத்தப்பட்டனர்.

சிகாகோ போன்ற நகரங்களில் இன்னும் பனி விலகவில்லை. குளிர்காலம் என்பது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு புதிதல்ல. ஆனால், சமீப காலமாக மிக அதிகமாக பனிப்பொழிவு இருப்பது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

இந்த குழுவின் ஆய்வு அறிக்கையின்படி, வட துருவ பிரதேசங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் கொண்டதாக உள்ளன. உலக வெப்பமயமாதலின் விளைவு தான் இது.

பல நாடுகளை விட, வட துருவ பிரதேசங்கள் மிக அதிக வெப்பம் உள்ளதாக இருக்கிறது. இதனால் ஏற்படும் குளிர்காற்று, தெற்கு நோக்கி வீச வேண்டும். துருவ பிரதேச பகுதிகளில் இப்படி குளிர்காற்று சுழற்சி என்பது எப்போதும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.

இதை ‘போலார் வொர்டெக்ஸ்’ என்று கூறுவர். இது வட, தென் துருவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உயரே எழுந்து, அங்கேயே சுழன்று கொண்டிருக்கும். கீழே இறங்காது. இதன் சுழற்சி காற்றின் போக்கிற்கு ஏற்ப இருக்கும். ஒரு சில முறை வடக்கு நோக்கி தெற்கில் இருந்து வீசும். அதுபோல, எதிர்திசையில் திரும்பி வீசும். இதனால் எந்த பெரிய விளைவும் ஏற்படாது.

மேலும் இந்த வெப்ப மயமாதலால் ஏற்படும் குளிர்காற்று சுழற்சி, பலமாக சுழன்று, ஒரு கட்டத்தில் பலவீனமடையும். அப்படி பலவீனம் அடையும் போது, மத்திய பகுதிகளில் மிக அதிகமாக குளிர் காற்றும், பனிப்பொழிவையும் ஏற்படுத்தும். இதெல்லாம் வட, தென் துருவ பகுதிகளில் தான் ஏற்படும்.

அதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இப்படி குளிர் காற்றும், பனிப்பொழிவும் ஏற்படும் முன், மிகமிக அதிக வேகத்தில், அதாவது ஜெட் வேகத்தில் குளிர் காற்று வீசும். மாறி மாறி , எதிர்திசைக்கும், நேர் திசைக்குமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த குளிர்காற்று திடீரென தரை மட்டத்தையும் தாக்கும் வல்லமை படைத்தவை.

ஆனால், சமீப காலமாக தெற்கு நோக்கி இல்லாமல், கிழக்கு நோக்கி இப்படிப்பட்ட பயங்கர குளிர்காற்று வீசத்தொடங்கியதை பார்க்க முடிந்தது. கடந்த சில ஆண்டாகவே, கனடா, அமெரிக்காவின் சில பகுதிகள், பிரிட்டனின் சில பகுதிகள் பெரும் குளிருக்கும், பனிப்பொழிவுக்கும் ஆட்படுவது இதுவே காரணம்.

வட துருவ பிரதேசங்கள் மற்றும் இடைப்பட்ட பிரதேசங்களில் நிலவும் வெப்ப வேறுபாடு தான் இப்படிப்பட்ட மாறான வானிலைக்கு காரணம் என்றும் இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளில் இந்த காலகட்டங்களில் கடுங்குளிர், பயங்கர பனிப்பொழிவு நீடிக்கும் ஆபத்து உண்டு எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Source: SpotTamil

60 வருடமாக குளிக்காமல் இருந்தால் இப்படிதான் இருப்போம் பாத்துகோங்க !

60 வருடமாக குளிக்காமல் இருந்தால் இப்படிதான் இருப்போம் பாத்துகோங்க !


இந்த மனிதர் தன்னை சுத்தம் செய்து கொண்டது 60 வருடங்களுக்கு முன்பு என்று கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் ! ஆனால் அதுதான் உண்மை !









இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்