Sunday, April 21, 2013

மஞ்சளின் மகத்துவம் மற்றும் மகிமை ♥

மஞ்சளின் மகத்துவம் மற்றும் மகிமை ♥

பெண்கள் திருமணம் முடிந்தபின், மஞ்சள் பூசுவதும், மாங்கல்ய கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதும், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தைத் திலகமிட்டுக் கொள்வதும், கணவன் இறக்கும்வரை ஒரு பண்பாட்டுச் செயலாக வாழ்வதும் எத்தனை புனிதமான இடத்தில் மஞ்சள் உள்ளது என்பதையே காட்டுகிறது. 
 
இத்தனை சிறப்புப் பண்புகளைப் பெற்ற மஞ்சள், உணவுப் பொருளாகவும், உணவுப் பொருளுக்கு சுவை, மணம் தருவதுடன், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பும் தருகிறது. மஞ்சளை மருந்தாக ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தினார்கள். தேர்ந்த மருத்துவர்கள் மஞ்சள் கலந்த மருந்து மூலம் எத்தனை கொடிய நோய்களையும் போக்கி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழுக்கை ஏன் விழுகின்றது ?


வழுக்கை !!!

தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர் முகேஷ் பாத்ரா. மும்பை மருத்துவரான பாத்ரா, கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஹோமியோபதி மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இன்டர்நெட்டிலேயே ஐந்து லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டாக்டர் பாத்ரா.

‘‘நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால், நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்