Friday, December 21, 2012

KIWI(சீனத்து நெல்லிக்கனி) யின் மருத்துவப் பண்புகள்


கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும்  நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.




இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?
இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (Chinese Gooseberry) என்றும் அழைக்கிறார்கள். தற்பொழுது இத்தகைய கனியானது, நியூஸிலாந்து, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

இந்தக் கனியின் மருத்துவப் பண்புகள்:

உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன.கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்.பொதுவாக விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!

நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.முதுமைக் கால கண் நோய்களைத் தடுக் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்