Saturday, December 21, 2013

வரதட்சணையாக 10 லட்சம் Likes கேட்ட மாமனார்

வரதட்சணையாக 10 லட்சம் Likes கேட்ட மாமனார்


ஏமனில் தந்தை ஒருவர், தனக்கு வரப்போகும் மருமகனிடம் பேஸ்புக்கில் 10 லட்சம் லைக்சை வரதட்சணையாக கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ், கவிஞர்.


இவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார்.

அதாவது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் பெற வைக்க வேண்டும் என்பதையே அந்த வரதட்சணையாகும்.

தற்போது சலீம் ஃபேஸ்புக் பக்கத்தை 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

10 லட்சம் லைக்சை பெற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமை ரத்து

அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமை ரத்து

ஜேர்மன் சர்வாதிகாரி அடாஃல்ப் ஹிட்லரின் கௌரவ குடியுரிமையை தெற்கு ஜேர்மனியிலுள்ள சிறிய நகரம் ஒன்று ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அடாஃப்ல்ப் ஹிட்லர், 1933ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை ஜேர்மனின் சர்வாதிகாரியாய் திகழ்ந்தார்.

ஹிட்லரை அரச தலைவராக நியமித்தவர் பால் வான் ஹைண்டன்பர்க்.


இருவருக்குமான கௌரவ குடியுரிமையை தெற்கு ஜேர்மனியிலுள்ள சிறிய நகரமா டியட்ராம்செல் (Dietramszell) ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதற்கு முதலில் கவுன்சில் மறுப்பு தெரிவித்ததால், மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

அதாவது, உள்ளூர் கவுன்சிலிங் உறுப்பினர் குழு சரித்திரத்தை மாற்றி எழுதும் வேலை தங்களுக்கு இல்லை என்றும், இது சர்சைக்குரிய நிலைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்து இப்பிரச்சையில் தலையிடாமல் போனது.

ஆனால் இப்போது இதுபற்றி கடும் போராட்டம் நிகழ்வதால் மக்களின் இக்கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய தீர்மானித்தனர்.

இதனையடுத்து இரண்டாவது சிறப்புக் கூட்டத்தில் குழுமிய அவ் உறுப்பினர்கள் தங்களது முந்தைய முடிவுக்கு மன்னிப்பு கோரி அதை மாற்றிக்கொண்டு இவ்விருவரின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு முழுமனதாக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

உலோக பொருட்களை கவர்ந்திழுக்கும் காந்த சிறுவன்

உலோக பொருட்களை கவர்ந்திழுக்கும் காந்த சிறுவன்


பிரேசிலை சேர்ந்த 11 வயது சிறுவன் பாலே டேவிட் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளான். இந்த சிறுவன் அதி பயங்கர காந்த சக்தி சிறுவனாக உள்ளான்.அந்த சிறுவனுக்கு இந்த விடயம் தான் பிரச்சனையாக உள்ளது. அவன் நடந்து செல்லும் பாதையில் உள்ள இரும்பு பொருட்கள் தானாக ஒடி வந்து ஒட்டிக் கொள்கின்றன.


கத்திகள், இடுக்கிகள், கத்திரிக்கோல் மற்றும் உலோக பொருட்கள் அனைத்தும் அவரை தேடி வந்து ஒட்டிக்கொள்கின்றன என்று தந்தை ஜீனியர் கூறுகிறார். இதே போன்ற சாதனையை குரோஷியாவை சேர்ந்த சிறுவன் இவான் ஸ்டோஜிகோவிக் நிகழ்த்துவது குறித்தும் ஆச்சரியம் ஏற்பட்டு உள்ளது.

குரோஷியா சிறுவன் ஏறக்குறை 25 கிலோ எடையுள்ள உலோக பொருளை சுமக்கும் திறன் பெற்றவனாக உள்ளான். சிறுவன் பாலே செல்லும் பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் உடலில் அதிக பொருட்களை சுமக்க வலியுறுத்துகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று பார்த்தது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

உலகை வியக்கவைத்த ‘எக்ஸ்-ரே கண்ணழகி’

உலகை வியக்கவைத்த ‘எக்ஸ்-ரே கண்ணழகி’


நமது உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.ஆனால், 1987ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை உடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள்



தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை உடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் காலப்போக்கில் உலகம் முழுவதும் படர்ந்து பரவியது.இதையடுத்து, இவரிடம் உள்ள அற்புத சக்தியை அறிந்த உள்ளூர் மக்கள், இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி படையெடுக்க தொடங்கினர்.

டாக்டரின் வயிற்றின் எந்த பகுதியில் ‘அல்சர்’ கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக் கட்டி அல்ல என்றும் தீர்க்கமாக கூறி இவர் மருத்துவ நிபுணர்களையே திகைக்க வைத்துள்ளார்.உலகின் பல்வேறு நகரங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய டெம்கினா, இதைப்போன்ற சிறப்பாற்றல் படைத்த ஒரே பெண்ணாக அறியப்படுகிறார்.
இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://en.wikipedia.org/wiki/Natasha_Demkina

மொபைல் வைரஸ் எச்சரிக்கை 2014ல் மூன்று மடங்காகப் பெருகும்

மொபைல் வைரஸ் எச்சரிக்கை 2014ல் மூன்று மடங்காகப் பெருகும்


இன்று ஆன்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில்,மெக் அபி மற்றும் நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ இயங்குகிறது. இந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன.


எனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. இந்த ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன.


இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன. தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும் வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, 2015 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும் வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.

* மொபைல் வைரஸ் எச்சரிக்கை..! 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் இருந்தன. 2014ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும் அறியப் பட்டுள்ளது. எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில் இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம் பிடிக்கும்.

* ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம் தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்
இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர், ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார்.

* புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும் வகையில் கூகுள் தந்து வருகிறது. அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

* கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகேஷன்களை இந்த வகையில் ஸ்கேன் செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது. தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது.

* எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும் இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது.

நன்றி : v4tamil

சாம்சங் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான கேம்பேட் (Gamepad) அறிமுகப்படுத்தியுள்ளது

சாம்சங் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான கேம்பேட்  (Gamepad) அறிமுகப்படுத்தியுள்ளது



ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஹேம்களை இலகுவாக விளையாடுவதற்காக பல்வேறு நிறுவனங்கள் கேம்  பேட்களை (Game pad) அறிமுகப்படுத்தியுள்ளன.எனினும் முதன் முறையாக தனது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான கேம்பேடினை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங்.

அன்ரோய்ட் இயங்குதளத்தைக் கொண்ட சாம்சங் ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் 4 அங்குலத்திலிருந்து 6.3 அங்குலம் வரையான தொடுதிரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் இச்சாதனம் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது. 



இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்