இந்தியாவின் கோயம்புத்தூர் உட்பட இன்னும் 12 நகரங்களுக்கு Google Live Traffic சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்பொழுது இந்தியாவின் Kolkata, Coimbatore, Lucknow, Surat, Thiruvananthapuram, Indore, Ludhiana, Visakhapatnam, Nagpur, Kochi, Madurai, Bhopal போன்ற நகரங்களில் இடம் பெறக்கூடிய போக்குவரத்து நெரிசலையும் Google Map இன் ஊடாக பார்ப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனை கணினியின் மூலம் Google Maps தளத்துக்குச் சென்று பார்க்க முடியுமான அதே வேலை உங்கள் Smart சாதனங்களுக்கு தரப்பட்டுள்ள Google Map செயலிகள் மூலமாகவும் பார்க்க முடியும்.
உதாரணத்திற்கு சென்னையில் இடம் பெறக்கூடிய போக்குவரத்து நெரிசலை நீங்கள் நேரடியாக அறிய வேண்டும் எனின் Google Map Search Bar இல் Traffic near Chennai என தட்டச்சு செய்வதன் மூலம் சென்னையில் இடம் பெறக்கூடிய நேரடி போக்குவரத்து நெரிசலை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளானது பிரதானமாக நான்கு வர்ணங்களில் அமைந்த கோடுகளை கொண்டிருக்கும். அவைகளின் விளக்கங்கள் பின்வருமாறு.
- பச்சை நிற கோடுகள் - போக்குவரத்து நெரிசல் இல்லை
- மஞ்சள் நிற கோடுகள் - ஓரளவு போக்குவரத்து நெரிசல் உண்டு
- சிவப்பு நிற கோடுகள் - அதிக போக்கு வரத்து நெரிசல்கள் உள்ளது.
- சாம்பல் நிற கோடுகள் - போக்குவத்து நெரிசல் தொடர்பான தகவலை பெற முடியாதுள்ளது.
இந்த வசதி மூலம் நீங்கள் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பிரயாணத்தை எந்த பாதையில் மேற்கொள்வது சிறந்தது எனும் தீர்மானத்துக்கு வர உதவியாக அமையும்.
எனவே இந்த வசதியானது அன்றாடம் பிரயாணங்களை மேற் கொள்பவர்களுக்கு மாத்திரம் அல்லது அனைத்து தரப்பினர்களுக்கும் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.