Saturday, October 20, 2012

மனிதர்களின் தலைகளை வெட்டி வீரத்தை வெளிப்படுத்திய நாகாலாந்து மக்கள்


நாகாலாந்து மாநிலத்தில் வாழ்ந்த கோன்யா இனக்குழுக்களே மனித தலைகளை வெட்டுவதை வீரமாக கருதி முற்காலத்தில் செய்திருக்கிறார்கள்.




நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மோன் மாவட்டத்தில் கடந்த ஜூலை  மாதம் ஒரு இடத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இவ்வளவு மனிதர்கள் ஒரே நேரத்தில் இறந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

கோன்யா இனக்குழுவினருடைய நிலத்தை யாரேனும் அபகரித்தால் அக்குழுவினர் அபகரித்தவர்களின் தலைகளை வெட்டியே தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்துவார்களாம்.

அதேபோல் இந்த தலை வெட்டி மனிதர்கள் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தியமைக்கு சான்றாக இன்றளவும் ஒரு கல்வெட்டு அம்மாநிலத்தில் இருக்கிறது.


சான்று கூறும் கல்வெட்டு:

1923ம் ஆண்டு பிறந்த லெப் அகாங் ரோங்காங் என்ற கோபா, கடந்த 2001ம் ஆண்டுதான் இறந்திருக்கிறார்.

அவருக்கு மொத்தம் 18 மனைவிகள், 19 மகன்கள், 7 மகள்கள், 59 பேரக் குழந்தைகள்.

இவர் வாழ்வில் நிகழ்த்திய சாதனை என்ன தெரியுமா? இவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை மற்றொரு குழுவினர் ஆக்கிரமிக்க முயன்றபோதெல்லாம் அவர்களது தலைகளை வெட்டி எடுப்பதே வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.

தமது வாழ்நாளில் 36 மனித தலைகளை வெட்டி எடுத்து "வீரமிக்க" மனிதராக வாழ்ந்திருக்கிறார். இவரது வழித்தோன்றலோ 130 மனிதத் தலைகளை வேட்டையாடிருக்கின்றனராம்.

தலை கிடைக்காவிட்டால் காது:

இன்றளவும் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் வசித்து வரும் "முன்னாள்" தலைவெட்டி மனிதர்கள் கூறும் மற்றொரு சுவாரசிய தகவல் என்ன தெரியுமா? எதிர்க் குழுவைச் சேர்ந்தவர்களின் தலையை வெட்டி எடுக்க முடியாது போனால் ஆகக் குறைந்த பட்சம் அவர்களில் ஒருவரது ஒரு "காதையாவது" அறுத்து வந்து தங்களது கிராமத்து தலைவரிடம் ஒப்படைத்து "வீரத்தை" வெளிப்படுத்திக் கொள்வார்களாம்.

அமெரிக்காவின் அமேசான், ஆப்பிரிக்காவின் அடர் வனத்து பழங்குடிகள் எல்லாம் இப்படி மனித தலைவேட்டையை முன்னரே நிறுத்திவிட்டனர்.

இருப்பினும் உலகிலேயே மனித தலைவெட்டுதலை கடைசியாக நிறுத்திய வரலாற்று பெருமைக்குரியவர் நாகாலாந்தின் கோன்யாக் குழுவினரே ஆவார்.


Courtesy : KAPILS [USETAMIL]

2 comments:

  1. முட்டாள் தனத்திலும் மகா முட்டாள்தனமாக இருக்கிறதே! பகிர்வுக்கு நன்றி நண்பரே!


    (word verificationஐ எடுத்துவிடுங்கள் நண்பரே! சந்தேகமெனில் தொடர்பு கொள்ளுங்கள்! vsvmva@gmail.com) நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. மிக்க நன்றி ....

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்