Sunday, December 30, 2012

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?


உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .


ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

4 comments:

  1. Dear Blogger,

    will you be able to provide evidence for your above blog post if I'm not offending? I'm surprised about the fact you mentioned about snakes mating on basis of scent.

    ReplyDelete
  2. ஐரோப்பிய,அமெரிக்க,அவுஸ்ரேலிய, ஆபிரிக்கக் கணடங்களுடன் ஆசியாவிலும் பாம்பு உண்டு. ஆனால் பாம்புக்குக் 'பாலும், முட்டையும்' கொடுக்கும் வழக்கம் இந்தியாவிலே தானே பரவலாக உண்டு.வளர்க்கும் பாம்புக்கு பால் கொடுக்கலாம். காடு, மலையெங்கும் இருக்கும் பாம்புக்கு யாருங்க
    பால் கொடுப்பது.
    இத் தகவலை எங்கே படித்தீர்கள்.
    நானும் எத்தனையோ விபரணச் சித்திரங்கள் பார்த்துள்ளேன். எதிலும் இத் தகவல் பாம்புகள் பற்றிக் கூறப்படவில்லை.

    ReplyDelete
  3. I am unsure of the usage of Egg and Milk. But what author said about snakes is absolutely correct.

    Female snakes also emit odors called pheromones that attract the males and signal that she is ready to mate. It's sort of like when a woman uses perfume to catch the attention of a passing guy. Males will smell these pheromones when they flick out their tongues and track the female down.

    For further details google "snake pheromone".

    ReplyDelete
  4. இது மாதிரி அப்படி சொன்னாத் தான் இப்படி செய்வீங்க...நிறய உண்டு...அந்த காலத்து மூடப் பழக்கங்களுக்கு இப்ப விளக்கம் கொடுப்பது.
    கோலம் போடுவது எறும்புக்கு இடும் உணவு...அது தர்மம்; நல்ல காரியம் என்பார்கள்; அப்படி சொன்னாத் தான் இப்படி....செய்வீங்க என்பார்கள்.
    அப்ப வீட்டில இருக்கும் எறும்பு புத்துல (சமயல் அறையில் எப்படியும் இருக்கும்) அரிசி மாவு போடறது...

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்