Sunday, January 6, 2013

'Earphone' கலாச்சாரம்!


எப்படி தொத்திக் கொண்டதோ தெரியவில்லை,ஆனால் இன்று பெருநகரங்களில் வாழும் அநேக இந்திய இளைஞர்களை ஆட்கொண்டிருக்கிறது இந்த earphone மோகம் ! நெரிசல் மிகுந்த சாலையில் தங்கள் மோட்டார் வாகனங்களை செலுத்தும் போதும், காலைப் பொழுதில் அலுவலங்களை நோக்கி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போதும் earphone-ஐ காதில் மாட்டிக்கொண்டு தங்களுக்கென ஒரு தனி உலகத்தை படைத்து கொண்டு நடை போட தொடங்கி விட்டது இன்றைய இளைய சமுதாயம்.



முன்பெல்லாம் பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்தில் அமர்ந்து வரும் பயணியிடம் இரண்டொரு வார்த்தை பேசி புன்னகைத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து சுற்றி நடக்கும் விஷயங்களை வாயாலும் மனதாலும் அசைபோட்டு கொண்டு செல்வது நம்மூர் வாசிகளுக்கு வழக்கம். ஆனால் இன்றோ நாம் நகரப்பேருந்தில் ஏறிய மறுகணமே 'சுவிட்ச்' போட்ட இயந்திரம் போல் காதில் இந்தக் கருவியை மாட்டிக்கொண்டு அறிவுப்புலன்களை மூடிக்கொள்கிறோமோ என்ற ஐயம் எனக்கு! Earphone மாட்டிக்கொண்டு படுத்தால்தான் இரவுநேரங்களில் உறக்கமே வருவதாக கூறுகின்றனர் சில அன்பர்கள் !

பெருகி வரும் இந்த earphone கலாச்சாரம் ஆரோக்கியமானதா? தவிர்க்க முடியாத ஒன்றா? இதன் 'கிரியாஊக்கிகள்'(catalysts) என்னனென்ன? காரண காரியங்கள் (cause and effect ) என்னனென்ன? ஒரு குட்டி 'நீயா நானா'விற்கு உங்கள் அனைவரையும் வாயாட அழைக்கிறேன்! பணிவோடு...அன்போடு...ஆவலோடு ! கருத்துக்கள் பரிமாறப்படட்டும்!

மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் - 'Earphone' 'switch' இந்த இரண்டு ஆங்கில சொற்களுக்கும் சரியான தமிழ் வார்த்தை தெரிந்தால் எனக்கும் சொல்லி கொடுங்களேன்!

நன்றி : பூபேஷ்குமார் 

5 comments:

  1. Switch- தூண்டணை, மின் விசை மாற்றி.
    EarPhone-செவிபேசி, செவியணி.

    ReplyDelete
  2. Switch-தூண்டணை, மின் விசை மாற்றி.
    EarPhone-செவிபேசி, செவியணி.

    ReplyDelete
  3. Though I am science is right man. every invention has two coins. But this invention doesnt
    has any bad thing. The bad thing of a invention is mostly how we use it. In this case this is very good to enjoy music personally and no disturbance to others like that. But it should be used minimally

    ReplyDelete
  4. ஆரோக்கியமானதல்ல அதனால் நிறைய விபத்துக்கள் ஏற்படுகின்றன.மேலும் நிறையப்பேர் அதிக சத்தத்துடன் கேட்பதால் அடுத்தவருக்கும் அந்த நாராச சத்தம் கேட்பதால் எல்லோருக்குமே பிரச்சனை

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்