Sunday, February 17, 2013

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்...!!!


அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்...

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும்நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும். 

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.

அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது.



மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.

இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.


4 comments:

  1. நல்ல தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. அடடா! இந்த இனிய பழத்தை அத்திப்பழமெனவா கூறுவார்கள். இன்றே அறிந்தேன். இங்கு கிலோ 2 யூரோவுக்கு எப்போதும் வாங்கலாம்; இவை(Figue) இஸ்ரேல், மற்றும் மொரக்கோ, துனிசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாவதுடன், பிரான்சின் கடற்கரையோர நகரங்களில் பெருவாரியாகவும் உள்பகுதிகளில் ஆங்காங்கே பரவலாகவும், நிலமுடையவர்கள் ஒரு மரத்தை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
    பழமாக உண்பதுடன்,சிலவகைச் சமையலுக்கும், சிலவகை கேக், யாம் செய்யவும்; வத்தலாகப் போட்டும் பாதுகாத்தும் இங்கே பயன்படுத்துகிறார்கள். கழிவே இல்லாத உண்பதற்கு மிக இலகுவான நல்ல சுவைமிக்க பழம்.
    கண்ணதாசன் பாடிய "அத்திக்காய்" என்ன என்பதை அறிய எனக்கு 50 வயது தாண்டியது. ஈழத்தில் இதை நான் கண்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. :) உங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  3. நல்ல தகவலுக்கு நன்றி

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்