Sunday, December 8, 2013

பாரீசில் 75 வருடங்கள் திறக்கப்படாமல் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு

பாரீசில் 75 வருடங்கள் திறக்கப்படாமல் இருந்த  அடுக்கு மாடி குடியிருப்பு 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 75 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை கடந்த வருடம் திறந்த பொழுது அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர் . ஏனெனில் சிலந்தி வலை பின்னி அனைத்து பொருட்களும் அப்படியே காலத்தை கடந்து இருந்தன !

இந்த குடியிருப்பில் வசித்து வந்த பெண்மணி இரண்டாம் உலக யுத்தத்தின் போது தெற்கு பிரான்ஸ் சென்ற அவர் திரும்ப வரவே இல்லை . இத்தனை காலம் கடந்து எப்படியோ அவருடைய சொந்தங்கள் இந்த வீட்டை கண்டு பிடித்துள்ளனர் . 

சிலந்தி வலைகளின் பிடியில் இருந்த இந்த குடியிருப்பில் செல்லும் பொழுது மிகவும் வினோதமான உணர்வுகள் வருவதாக அனைவரும் கூறுகின்றனர் . ஆம் பின் காலத்தை கடந்து இத்தனை காலம் அமைதியாக இருந்த ஒரு இடத்தில் அத்தகைய உணர்வு வருவது ஒன்றும் வியப்பு இல்லை !

இதற்கும் மேலாக அந்த வீட்டில் இருந்து 2.1 மில்லியன் யூரோ மதிப்புள்ள வரைப்படங்கள் கிடைத்தன . இவற்றை வரைந்தது ஜியோவானி போல்டினி [Giovanni Boldini] என்ற புகழ்பெற்ற ஓவியர் !

இத்தனை காலம் இந்த குடியிருப்பை எவரும் கண்டு கொள்ள வில்லை என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வியப்பாக இருக்கிறது ! 








No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்