Tuesday, January 7, 2014

தண்ணீருக்குள் கூகிள் எர்த் கண்டு பிடித்த வட்ட வடிவ வினோத குழிகள் !

தண்ணீருக்குள் கூகிள் எர்த் கண்டு பிடித்த வட்ட வடிவ வினோத குழிகள் !


கூகிள் எர்த் தொழிற்நுட்பம் வந்த பின்பு வானில் இருந்து பூமியை பார்ப்பது என்பது சுலபமாக போனது . கூகிள் எர்த் தனது தேவைக்காக செயற்கை கோள்கள் மூலம் படங்கள் எடுத்து சேமித்து வைக்கும் . அது போன்று படங்கள் எடுக்கும் போது சில வித்தியாசமான படங்கள் சிக்குவது உண்டு . அது மாதிரி சிக்கிய படங்கள் தான் இவை . இவற்றை கூகிள் நிறுவனம் Circular Anomaly என்று குறிப்பிடுகிறது. அதாவது பூமியின் வெவ்வேறு இடங்களில் பெரும்பாலும் தண்ணீருக்குள் வட்ட வடிவ குழிகள் தென்படுகிறது . 


இவை பெரும்பாலும் சவுதி அரேபியா , நார்த் கரோலினா மற்றும் ப்ளோரிடா ஊர்களின் கடலோரங்களில் அதிகமாக தென்படுகிறது . இவை தோற்றத்தில் பெரும்பாலும் ஒரே மாதிரி உள்ளன . இவைகளை பழங்கால சமாதிகள் என்கிற அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றனர் . இவற்றில் பெரும்பாலானவை கி.பி 800 அளவு பழமையானது என்று கண்டு பிடித்துள்ளனர் . இன்னும் சில கிட்டத்தட்ட கி.பி 1௦,௦௦௦ வருட பழமையானது !

மேலும் பலர் பல்வகை கருத்துகளை முன் வைத்துள்ளனர் . எது எப்படியோ , மனிதன் இந்த உலகை பற்றி தெரிந்து கொண்டது என்பது கையளவுதான் ! நமக்கு புலப்படாத , புரியாத , பயம் உண்டாக்கும் பல விசயங்களும் இன்னமும் இந்த பூமியில் உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை !











No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்