Saturday, December 14, 2013

இந்திய மக்களிடம் ஓரினச் சேர்க்கை பற்றிய நிலைப்பாடு தான் என்ன ???

இந்திய மக்களிடம்  ஓரினச் சேர்க்கை பற்றிய நிலைப்பாடு தான் என்ன ???


ஓரினச் சேர்க்கை...

ஓரின சேர்க்கை எதிர்ப்பவர்கள் ' உடல்' சம்பந்தப்பட்ட உறவாக பார்க்கிறார்கள்.
ஓரின சேர்க்கை ஆதரிப்பவர்கள் 'உணர்வு' ரீதியாக பார்க்கிறார்கள் "

ஒரு ‘கே’ யின் தாய், என் பையன் 'கே'னு போன மாசம் தான் தெரியும். எனக்கும், என் கணவருக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. கொஞ்ச நாள்ல எங்கள நாங்களே சமாதானம் பண்ணிகிட்டோம். அவன் 'கே' என்பதால என் மகன் இல்லைன்னு சொல்ல முடியுமா !" என்றார். மேலும், " என் மகன் சமூக விரோதியல்ல. சமூக பார்வையில வித்தியாசமான பாலுணர்வு உள்ளவன். அவன் உணர்வ நாங்க புரிஞ்சிக்கிட்ட மாதிரி அவன் மாதிரி இருக்குறவங்களோட பெற்றோரும் புரிஞ்சிக்கனும்.


ஒரு லெஸ்பியன் பெண், " நான் பாலுணர்வால் வித்தியாசமானவள். ஒருவனுடைய திருமதியானவள் என்பதை விட நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு பெண்கள் மீது வரும் ஈர்ப்பு கூட ஆண்கள் மீது வரவில்லை" என்றாள். " பதினெட்டு வயதானவர்கள் தங்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்று சட்டமே சொல்லும் போது, அவர் ஆணாக இருந்தால் என்ன ? பெண்ணாக இருந்தால் என்ன ?. எதிர்பாலினரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூதாயம் கட்டுப்படுத்தலாம் ?" என்று கூறியிருக்கிறார்.

எது எப்படி ஆயினும் இது நம் நாட்டில் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு உறவாக தான் கருதப்படுகிறது. இந்த உறவுகள் மேலை நாடுகளிலே முதலில் ஆரம்பித்து படிப்படியாக நம் நாட்டுக்குள்ளும் நுழைந்து விட்டது.சட்டங்கள் எல்லாருக்கும் பொதுவானது ,நம்மை பாதிக்காதவரை அவர்களையும் அனுசரித்து போகவேண்டித்தான் இருக்கிறது.

நன்றி : இளையராஜா டென்டிஸ்ட் [Facebook]

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்