Saturday, December 14, 2013

உயிருள்ள மிருகங்களை கீ செயினில் அடைத்து விற்கும் சீன வியாபாரிகள் !

உயிருள்ள மிருகங்களை கீ செயினில் அடைத்து விற்கும் சீன வியாபாரிகள் !


சீனாவில் சமீபகாலமாக உயிருள்ள மிருகங்களை கீ செயினில் அடைத்து விற்கும் பழக்கம் பெருகி வருகிறது ! 

தெருவோர வியாபாரிகள் தான் பெரும்பாலும் இவற்றை விற்கின்றனர் . சிறு பிளாஸ்டிக் பைகளில் நிரந்தரமாக அடைத்து விற்கபடுகிறது . இவை சிறிது நேரம் மட்டுமே  உயிருடன் இருக்கும் . இவ்வகை கீ செயின்களை பரிசாக குடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது . அதுவும் இளைஞர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது .

சில வகை அறிய  ஆமைகள் மற்றும் இதர உயிரினங்கள் இதனால் அழிந்து வருகிறது . அரசாங்கமும் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை இது வரை ! மேலும் இவை சட்டப்படி குற்றமும் அல்ல .

பிரேசில் நாடு அறிய வகை ஆமையில் இருந்து கிங் பிஷ் வரை அணைத்து வகை கீ செயின்களும் இங்கு கிடைக்கிறது . பெரும்பாலும் மக்கள் அதிகம் நடமாடும் ரயில் சுரங்க பாதையிலும் , கடைத்  தெருக்களிலும் தான் இவற்றின் விற்பனை அமோகமாக நடை பெறுகிறது ! 

இதில் இருக்கும் நீர் சத்துக்கள்  உடையது எனவும் .. இவை நிறைய காலம் உயிரோடு இருக்கும் என்றும் இதை விற்பனை செய்வோர் கூறுகின்றனர் ஆனால் பெரும்பாலான விலங்குகள்  ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் இதை மறுக்கின்றனர் . 

இவற்றை எதிர்க்க உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பிய வண்ணம் உள்ளது . ஏதேனும் நல்லது நடக்கும்மா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும் !







1 comment:

  1. உயிருள்ள மிருகங்களை கீ செயினில் அடைத்து விற்கும் சீன வியாபாரிகள்...........

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்