Friday, January 3, 2014

கடுங்குளிர் வேளையில் ஊட்டியில் ஒரு கொலை - புதிர் கதை

தாஸ் என்பவர் ஊட்டியில் ஒரு பெரும் பணக்காரர். 

ஆனால் தனிமையில்தான் வாழ்ந்து வருகின்றார். 

அவரது நண்பர் ராமு.

ஒருநாள் மாலை நேரம் ராமுவிடம் இருந்து,,காவல்துறைக்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது.

தாஸ் வீட்டுக்கு உடனே வருமாறு ராமு வேண்டுகோள் விடுத்தார்.

காவல் அதிகாரி உடனே விரைந்து சென்றார்.

தாஸின் வீட்டுக் கதவின் தாழ்ப்பாள் உடைந்து , கதவு திறந்து கிடந்தது.

ராமு வெளியே நின்று இருந்தார்.

காவல் அதிகாரியை வீட்டுக்குள் ராமு அழைத்துச் சென்றார்.

முன் அறையில் தாஸ் இறந்து கிடந்தார்.

எப்படி இது? என்று ராமுவிடம் காவல் அதிகாரி கேட்டார். 


அதற்கு ராமு,  ஐயா இன்று குளிர் அதிகமாக இருந்தாலும், நான் எப்போதும்போல தாஸைப் பார்ப்பதற்கு வந்தேன்..கதவைத் தட்டினேன். யாரும் வந்து திறக்கவில்லை.பிறகு வீதிப்பக்கமாக இருந்த சன்னல் கண்ணாடியில் கொஞ்சம் மின்சார விளக்கின் ஒளி தெரிந்ததால், சன்னல் கண்ணாடி வழியாக யாரும் உள்ளே இருக்கிறார்களா என்று பார்க்க நினைத்தேன். 

அதனால் சன்ன;ல் பக்கம் சென்று எட்டிப்பார்த்தேன். குளிர் காரனமாக சன்னல் கண்ணாடியில் புகை படர்ந்திருந்ததால் உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. .உடனே எனது ககக்குட்டையை எடுத்து கண்ணாடியை நன்றாகத் துடைத்து, பிறகு உள்ளே பார்த்தேன். அங்கே தாஸ் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டேன். அதனால் ஏதோ ஆபத்து என்று கருதி தாமதம் செய்யாமல் உடனே கதவின் தாழ்ப்பாளை உடைத்து வீட்டுக்குள் போனேன். போனதும்தான் தெரிந்தது தாஸ் இறந்து கிடக்கிறார் என்று. எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அதன்பிறகு உங்களுக்கு தொலைபேசியில் செய்தி கூறினேன்.. என்றார்.  

சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்த காவல் அதிகாரி,  ராமு-----நீ தாஸைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் உன்னைக் கைது செய்கின்றேன் என்று கூறியபடி ராமுவைக் கைது செய்தார். 

நண்பர்களே---------------காவல் அதிகாரிக்கு ராமுவின் ஏன் சந்தேகம் ஏற்பட்டது? கூறுங்களேன் !

புதிர் விடை :


குளிர் என்பது தான் பாயிண்ட்.

குளிர்காலத்தில் அதிக குளிர் என்பதால் வீட்டின் உட்புற ஜன்னலில் தான் மிஸ்ட் - புகை, நீர் கோர்த்து இருக்கும், வெளிப்புறம் ஜன்னலை மட்டும் துடைத்தால் உள்ளே இருப்பதை பார்க்க முடியாது, உட்புறம் தான் துடைக்க வேண்டும்.

ராமு வெளிப்புற ஜன்னலைத் துடைத்து, ஜன்னல் வழியாக பார்த்திருக்க முடியாது, எனவே அவர் தான் கொலை செய்தார் என்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்தார்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்