Friday, January 3, 2014

காவலனின் கனவும் , அரசனின் பரிசும் - புதிர் கதை

ஒரு காலத்தில். இந்தியாவின் ஒரு ஊரை ஆண்டு வந்தரசாவிடம் தேவைக்கும் அதிகமான செல்வங்கள் மிதமிஞ்சியே இருந்து வந்தது. அவர் தனது கழஞ்சிய வளாகத்தை இரவுக்காவல்,பகற்காவல் என பலதரப்பட்டகாவல்காரரை நியமித்திருந்தார்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் இரவுக்காவல்காரன் அரச சபைக்கு மூச்சு தினற ஓடி வந்தான். அரசே..வேந்தே.. மன்னவா..என்றான் ! 


உடனே மந்திரியார் என்ன விசயம் எண்று கேட்டு முந்திரிக்கொட்டைபோல் முந்தினார், அதற்கு அவன் சொன்னான்

இன்றிரவு நான் ஒரு கனாக்கண்டேன் அரசன் இலங்கையை நோக்கி செல்லவிருக்கும் கப்பலை ஒரு கொள்ளைகூட்டம் அபகரித்துகொண்டு சென்றதாகக்கண்டேன் என்றான்.அப்படியா...(சபையே அதிர்ந்து போய்விட்டது)

சபையில் எல்லொரும் சொன்னார்கள்,இவன் சொன்னால் நிச்சயம் நடந்தேதீருமென்று, ஆனால் அரசன் நம்பவில்லை தனது பயணத்தை தொடர்ந்தான்.
கப்பல் போகும்வழியில் கொள்ளையர் கூட்டம் கப்பலை அபகரித்துக்கொண்டது.

அதிலிருந்து தப்பி வந்த அரசன்,சபையைக்கூட்டினான் அந்த காவல்காரனை அளைத்துவாருங்கள் என்றான். பின் அவனும் வந்தான், உடனே அரசன் அவனை புகழ்ந்துபேசி தேவையான பொற்காசுளையும் வழங்கி வேலை நீக்கம் செய்து விட்டான்!

என்னயிது கொடுமை அவன் அரசனுக்கு தான்கண்ட கனவைத்தானே சொன்னான்,நல்லதுதானே சொன்னான்.சபை குழம்பிப்போய் விட்டது,அரசன் ஏன் புகழ்ந்தான்,பொற்காசு கொடுத்தான்,வேலை நீக்கம் செய்தான்!

யாரங்கே......மந்திரிகளே பதில் கூறுங்கள்? 

புதிர் விடை :

கண்ட கனவைச் சொன்னதற்காகவும் அது பலித்ததற்காகவும் பரிசும் பாராட்டுகளும். இரவுக் காவலன் தூங்கினால்தானே கனவு வரும். தூங்கினால் வேலை எப்படி நிலைக்கும்? 

அதான் அரசன் வேலையை விட்டு நீக்கினான்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்