Sunday, January 5, 2014

கழண்டு ஓடிய காரின் டயரும் , அருமையான ஒரு யோசனையும் - புதிர்

♣ இது ஒரு சுலபமான புதிர் - முயற்சியுங்கள் ♣
திருச்சியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு காரில் நான் சென்று கொண்டிருந்தேன்.

திடீரென்று அந்தக் கார் நேராகச் செல்லாமல் அங்கும் இங்குமாக அலைந்தது.

சமாளிக்க இயலாமல் ஓட்டுனர் வேகத்தைக் குறைத்துக் காரை நிறுத்தினார்.
கீழே இறங்கிவந்து வாகனத்தின் நான்கு பக்கமும் ஆராய்ந்துபார்த்தார்.

ஒவ்வொரு சக்கரமாகப் பார்த்து வந்ததில், ஒரு சக்கரத்தில் பினைப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த நட்டுகள் நான்குமே இல்லாமல் சக்கரம் எந்த சமயமும் விலகிக் கீழே விழும் நிலையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.நல்ல வேளையாக பெரிய விபத்து நடக்காமல் இருந்தது என்று மனதைத் தேற்றிக்கொண்டார்.


அடுத்த நகரமான மேலூர் இன்னும் பத்து கிலோமீட்டார் தொலைவில் இருப்பதினால், வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று மேலூரில் இருந்து சக்கரத்தில் பொருத்தும் நட்டுகளை வாங்கி வந்து பொருத்தினால்தான் வண்டியை ஓட்ட முடியும் என்று முடிவு செய்துகொண்டார்.

இதற்கிடையில் காரில் இருந்து நான் இறங்கினேன். சக்கரத்தின் நட்டுகள் கழன்றுபோன விபரத்தைக் கூறி, .தான் மேலூர் சென்று விரைவில் நட்டுகளை வாங்கிவந்துவிடுவதாகக் கூறினார்.

சிறிது ஆலோசனை செய்த நான் ஒரு எளிய வழியைக் கூறினேன். 
அதன்படி செய்த ஓட்டுனர் வாகனத்தை உடனே கிளப்பினார். 
மெதுவாக ஓட்டிச்சென்று மேலூரை அடைந்தோம்.
வேறு புதிய நட்டுகளை வாங்கிப் பொருத்திக்கொண்டு வழக்கமான வேகத்தில் சென்று மதுரையை அடைந்தோம். 

நண்பர்களே------------நான் அந்த வாகன ஓட்டுனருக்கு என்ன வழி கூறியிருப்பேன்???

புதிர் விடை :-

மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து ஒரு நட்டை கழற்றி மாட்டியிருப்பீர்கள். மேலூர் வந்த பின்பு சரி செய்து பயணத்தை தொடர்ந்திருப்பீர்கள் !

1 comment:

  1. புதிரையும் சொல்லி அதற்கு விடையும் நீங்களே சொல்லி விட்டீர்கள். நாங்க என்ன பின்னூட்டம் இடுறது?

    ReplyDelete

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்