Sunday, January 5, 2014

சிகை அலங்கார கடையும் இலவசமும் - புதிர் கதை

பெங்களூரில் ஒருவன் சிகை அலங்கார நிலையம் ஒன்றை வைத்திருந்தான். மக்களுக்கு சேவை செய்யும் ஆட்கள் முதன்முதலாக கடைக்கு வந்தால், தான் இலவசமாக சிகை அலங்காரம் செய்வது என்ற முடிவை ஒருநாள் எடுத்தான்.

அன்று காலை முதன் முதலாக சவரம் செய்துகொள்ள வந்தார் ஒருவர்.
அவனும் அவருக்கு சவரம் செய்துவிட்டான். எல்லாம் முடிந்து பணம் கொடுக்க அவர் வந்தபோது நாவிதன் “ ஐயா----நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் “ என்று கேட்டான். அதற்கு அவர் “ நான் ஒரு பூக்கடை வைத்திருக்கின்றேன்.” என்றார்..

உடனே அவன் , “ ஐயா---பூக்கடை வைத்து புனிதமான மலர்களை மக்களுக்குக் கொடுக்கும் உங்களிடம் இன்று பணம் வாங்கப் போவதில்லை.” என்றான்.அவரும் நன்றி என்று கூறிவிட்டுச் சென்றார்.
மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்த நாவிதன், கதவுக்கு முன்னால் ஒரு நன்றி கூறும் அட்டையும், பக்கத்திலேயே ஒரு பூங்கொத்தும் வைக்கப்பட்டிருந்தது.


அன்று முதன் முதலாக வந்தவர், முடி அலங்காரம் செய்துகொண்டபிறகு பணம் கொடுக்க வந்தார்.நாவிதனும் அவருடம் அவர் என்னவாக இருக்கின்றார் என்று கேட்டான். அவர் ஒரு பேக்கரி வைத்து வியாபாரம் செய்வதாகக் கூறினார். உடனே நாவிதன், “ ஐயா----பேக்கரியில் ரொட்டிகளை உற்பத்தி செய்து, மக்களின் வயிற்றுப் பசியைப் போகுகிறீர்கள். உங்களுக்கு இலவசம்” என்றான். அவரும் நன்றி கூறிவிட்டுப் போனார். 

மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்தவன், கதவுக்கு எதிரே ஒரு வாழ்த்து அட்டையும், பக்கத்திலேயே ஒரு கேக் பார்சலும் வைக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் முதன் முதலாக வந்தவர் பேஷியல் செய்துகொண்டார். அவர் பணம் கொடுக்க வந்தபோது, “ ஐயா—தாங்கள் என்னவாக இருக்கின்றீர்கள்” என்று விசாரித்தான்.
அதற்கு அவர் தான் ஒரு மென்பொருள் நிபுணர் என்றார்(SOFTWARE ENGINEER)அவரிடமும் அவன் பணம் வாங்காமல் அவரிடம் தனது கொள்கையைக் கூறி அனுப்பித்தான். அவரும் நன்றி கூறிவிட்டுப் போனார்.

மறுநாள் காலையில் கடையைத் திறக்கவந்தான்.
அவன்.கடைக் கதவின் முன்னால் இருந்தததக் கண்டு நாவிதன் திகைத்து நின்றான். 

நண்பர்களே அது என்னவாக இருந்திருக்கும் என்று நீங்கள் கூறலாமே!!

புதிர் விடை :-

அந்த மென்பொருள் நிபுணர் என்ன செய்தார் தெரியுமா??

தனது கணிணியில் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த விஷயத்தைத் தெரிவித்து ஈ மெயில் அனுப்பி ---அப்படி அனுப்பியதன் நகல் எடுத்து கடை வாசலில் ஒட்டி வைத்திருந்தார்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்