Saturday, January 4, 2014

வீரசிங்கும் அவரது நண்பரும் - புதிர் கதை

வீர்சிங் ஒருநாள் தனது நன்பரான ஒரு சர்தாரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான்.பேச்சு பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது.

இறுதியில் சர்தார்களைப் பற்றி அடுத்தவர்கள் கேலியும் கிண்டலும் செய்யும் விஷயத்தில் வந்து நின்றது.

சர்தார்களை கேலிப் பொருளாக அடுத்தவர்கள் நினைப்பது வீர்சிங்கிற்குப் பிடிக்கவில்லை. சர்தார்கள் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தான்.

அவனது நண்பரும் அதை ஒத்துக்கொண்டார்.அதற்காக என்ன செய்யலாம் என்று இருவரும் ஆலோசித்தார்கள். இறுதியாக வீர்சிங்கிற்கு ஒரு அருமையான வழி புலப்பட்டது. அதை நண்பரிடம் வீர்சிங் கூறினான்.

நண்பரும், ஆஹா ---அருமையான வழி என்று ஒத்துக்கொண்டு அதை அடுத்த நாள் செய்துவிட வேண்டியதுதான் என்று பேசிக்கொண்டு பிரிந்து சென்றார்கள்.


அடுத்த நாள் பக்கத்தில் இருந்த கடற்கரைக்கு மாலை நேரத்தில் சென்றார்கள்.அபோதுதான் அங்கே மாலைநேரக் கடற்காற்று வாங்குவதற்கு மக்கள் சேர ஆரம்பித்திருந்தார்கள்.
வீர்சிங்கும் அவனது நண்பரும் கடற்கரையோரமாக நின்று கொண்டார்கள்.
வீர்சிங் கடலை நோக்கிக் கையைக் காட்டினான். 
அவனது நண்பர்- உடனே---ஆமாம் வீர்சிங்---ஆஹா என்ன அற்புதமான காட்சி----அருமை ------- அருமை என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே அவரும் கடலையே நோக்கியபடி நின்றிருந்தார்.

இவர்களைக் கண்ட மற்றவர்கள் கடலில் என்ன தெரிகிறது என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.ஆனால் வீர்சிங்கும் அவனது நண்பரும் பின்பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. மேலும் சப்தமாக ---ஆஹா ஆஹா என்று கூறியபடியே கடலையே பார்த்தபடி நின்றார்கள்.

அவர்கள் பின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூட ஆரம்பித்ததை மக்களின் சலசலப்பில் இருந்தும், பேச்சுக் குரல்களில் இருந்தும் ஊகித்துக்கொண்ட வீர்சிங்கும் அவனது நண்பரும், உள்ளூற நகைத்தபடியே, தாங்கள் சர்தாராக இருந்தும், எப்படி புத்திசாலித்தனமாக அடுத்தவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோம் என்று தங்களைத் தானே மனதில் புகழ்ந்துகொண்டார்கள்.இரவு பத்து மணி ஆகிவிட்டது. 

சரி இனியும் ஏமாற்றக் கூடாது என்று நினைத்துத் திரும்பி கூடி நின்றிருந்தவர்களைப் பார்த்து , பார்த்தீர்களா? சர்தாரின் புத்திசாலித் தனத்தை என்று அருமையான கேள்வி ஒன்றைக் கேட்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

வீர்சிங்கும் அவனது நண்பரும் பின்பக்கம் திரும்பி அங்கிருந்தவர்களைப் பார்த்ததும், பலத்த அதிர்ச்சிக்கு ஆளானார்கள்!!!!!!!!!

நண்பர்களே -------------- இங்கேதான் புதிர்க் கேள்வி வருகின்றது.

விர்சிங்கும் அவனது நண்பரும் கூடியிருந்தவர்களைப் பார்த்ததும் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள்?
அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கூட்டம் கூடியிருந்ததா?

அல்லது மிகவும் குறைவான ஆட்களே இருந்தார்களா?

அல்லது காவலர்கள் நின்றிருந்தார்களா?

வீர்சிங்கும் அவனது நண்பரும் ஏன் அதிர்ச்சி அடைந்தார்கள்?

புதிர் விடை :-

அவர்கள் பின்னாடி நின்றிருந்த கூட்டம் பூராவுமே சர்தார்ஜிகள்....!!

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்