Saturday, January 4, 2014

2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலர்! அவா்களின் வரிசையும்

2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலர்! அவா்களின் வரிசையும்


2013ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 3.7 ட்ரில்லியன் டாலராகவும், பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டிருப்பதாகவும் ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ப்ளூம்பெர்க் தளமானது 2013ஆம் ஆண்டின் 300 கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து பில்கேட்ஸ் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 15.8 பில்லியன் டாலர் அதிகரித்து 78.5 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த மே மாதம் மெக்சிகோவின் முதலீட்டு நிறுவன அதிபர் கால்ஸ் சிலிமிடம் இருந்து முதல் கோடீஸ்வரர் என்ற பெயரை 6 ஆண்டுகளுக்குப் பின்னர் தட்டிப் பறித்தார் பில்கேட்ஸ்


பிரபல கேசினோ அதிபர் லாஸ் வேகாஸ் குழுமத்தின் ஷெல்டன் அடெல்சனின் சொத்து மதிப்பு 2012 ஐ விட 14.4 பில்லியன் டாலர் உயர்ந்து 2வது இடத்தில் இருக்கிறார்.


ஃபேஸ்புக்கின் அதிபர் மார்க் ஸ்கெர்பெர்க்கின் சொத்து மதிப்பு 12.4 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளதாம்.


ஆசியாவின் முதல் பணக்காரராக தொடர்ந்தும் லி கா ஷின் இருந்து வருகிறது. அவரது சொத்து மதிப்பு 30.2 பில்லியன் டாலர்.



சீனாவில் கோடீஸ்வரர்கள் ஸோங் க்வின்கோ மற்றும் வாங் ஜியானலின்ஆகியோரிடையேதான் யார் முதல் கோடீஸ்வர் என்ற போட்டி. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மாறி மாறி சீனாவின் முதல் கோடீஸ்வரர் பட்டியலில் இருந்துள்ளனர் 


ரஷியாவின் அலிஷர் உஸ்மனோவ் அந் நாட்டின் கோடீஸ்வரர் பட்டியல் முதலிடத்தில் இடம்பிடித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 20.2 பில்லியன் டாலர்.



சவூதியின் இளவரசன் அல்வலீத் பின் தலால் தொடர்ந்தும் மத்திய கிழக்கின் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 32.4 பில்லியன் டாலர்


No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்