Saturday, January 4, 2014

வீரசிங்கும் நேர்முகத் தேர்வும் - புதிர் கதை

நமது நகைச்சுவை நாயகன் வீர்சிங்கை அனைவருமே அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.

வீர்சிங் ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போயிருந்தான். அவனது சர்ட்டிபிகேட்டுகள் அனைத்தையும் பார்த்த தேர்வுக் குழுவினர் அவனைப் பார்த்து, நல்லது வீர்சிங். இப்போது உனது பொது அறிவைப் பரீட்சிக்கப் போகின்றோம்..இந்தப் பரிசோதனையில் நீ தேர்வு பெற்றால் வேலை உனக்குத்தான்என்றார்கள். 

வீர்சிங்கும் துணிச்சலுடன் நான் தயார் என்றான். அவனைப் பார்த்த தேர்வுக் குழுவின் ஒரு அதிகாரி,  வீர்சிங்! சுலபமான பத்துக் கேள்விகள் கேட்கலாமா ? அல்லது கடினமான ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாமா? நீ இதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்துகொள் என்றார்.


சிறிது நேரம் ஆலோசனை செய்த வீர்சிங். ஐயா --- சுலபமான பத்து கேள்விகளைவிட கடினமான ஒரே ஒரு கேள்வியை மட்டும்தான் நான் தேர்வு செய்கின்றேன் என்றான்.

அப்படியே ஆகட்டும், என்றவர், எது முதலில் வருகின்றது? இரவா??? அல்லது பகலா?? என்று கேட்டார். சிறிது நேரம் ஆலோசித்த வீர்சிங் பதிலைக் கூறினான். அவனது பதிலைக் கண்டு வாயடைத்துப் போன தேர்வுக் குழுவினர் அவனுக்கே அந்த வேலைக்கான உத்திரவைக் கொடுத்தார்கள்.

நண்பர்களே..அவர்களது கேள்விக்கு வீர்சிங் என்ன பதிலைக் கூறியிருப்பான்?

புதிர் விடை :-

முதலில் தேர்வுக்குழுவினரின் நிபந்தனை என்ன என்று பார்ப்போம்.
கடினமான ஒரே ஒரு கேள்வியா? அல்லது சுலபமான பத்து கேள்விகளா?
வீர்சிங் தேர்வு செய்தது கடினமான ஒரே ஒரு கேள்வியைத்தான்.

அடுத்து அவர்களது கேள்வி " முதலில் வருவது ---இரவா? அல்லது பகலா??"
பொதுவாக இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும், என்ன பதில் கூறுவது என்று புரியாமல் குழப்பம் அடைந்து "தெரியாது" என்றுதான் பதில் கூறுவார்கள்.

ஆனால் வீர்சிங்கோ இரவு என்று துணிச்சலாக பதில் கூறினான்.
தேர்வுக் குழுவினர் " அது எப்படி பகல் முடிந்தால்தானே இரவு வரும்.?"என்று கேட்க நினைத்தாலும் அவர்களால் கேள்வியை எழுப்ப முடியாது. வீர்சிங்கின் பதிலுக்கு அவர்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். ஏனென்றால் கடினமான ஒரே ஒரு கேள்வியை மட்டும்தானே அவர்கள் கேட்க முடியும்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்