Sunday, January 5, 2014

“வெந்ததின் மேலே நின்றுகொண்டு, தின்று சிவக்கின்ற பெண்ணே! சோற்றைக் கறி தின்னுவதைப் பார்க்கவில்லயா? - புதிர்

ஒரு அரசன் ஒருவன் மாறு வேடத்தில் தன் நாட்டில் உள்ள ஒரு சிறு ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தான். அப்போது அரசனின் காதில் “வெந்ததின் மேலே நின்றுகொண்டு, தின்று சிவக்கின்ற பெண்ணே! சோற்றைக் கறி தின்னுவதைப் பார்க்கவில்லயா?” என்று ஒரு ஆண் பேசுவது விழுந்தது. 

அவன் என்ன சொல்கிறான் என்று அரசனுக்குப் புரியவில்லை. அந்தப் பெண் என்ன செய்துகொண்டிருக்கின்றாள்?அவன் ஏன் அப்படிச் சொன்னான்? என்று குழம்பியபடியே சுற்று முற்றும் பார்த்து அங்கே ஒரு பெண் இருப்பதைக் கண்டான். அவளைக் கண்டதும்தான் அந்த ஆண்குரல் கூறியதின் பொருள் அரசனுக்கு விளங்கியது. அப்போது அந்தப் பெண் பேச ஆரம்பித்தாள்.


“பட்ட மரத்தின் மீது ஏறிப் பச்சிலை தின்னுகின்ற மாடே! கட்டிஒய மாடானால் இங்கே வராதே! கட்டாத மாடென்றால் இங்கே வா” என்றாள்.

மீண்டும் குழப்பம் அடைந்தான் அரசன். அவளது சொல்லுக்குப் பொருள் விளங்கவில்லை.கொஞ்சம் எட்டிப் பார்த்தான் …அங்கே ஒரு ஆண் இருப்பதைக் கண்டான். அவனைக் கண்டதும்தான் அவள் கூறியதன் பொருளை உணர்ந்தான் அரசன்.

ஆஹா----அந்த ஆணுக்கு ஏற்ற அறிவுடையவளாக இருக்கிறாளே இந்தப் பெண் என்று வியந்தான்.

இருவரையும் அழைத்தான். அவர்களது அறிவை மெச்சி அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்து அவர்கள் இருவருக்கும் மணம் செய்து வைத்தான்.

நண்பர்களே----அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று எனக்கு விளங்கவில்லை-----அந்த ஆண் கூறியதன் பொருளையும் அதற்கு பெண் அளித்த பதிலின் பொருளையும் நீங்கள்தான் எனக்குச் சொல்லவேண்டும்.

புதிர் விடை :-

அவள் நெல்லைக் காய வைத்துக்கொண்டிருந்தாள். அது வேக வைத்த புழுங்கல் நெல்.அதனால் அவளை வெந்ததின்மேல் நின்றுகொண்டிருக்கும் பெண்ணே என்றான்.

அவள் வாய் வெற்றிலை பாக்கு போட்டுச் சிவப்பாக இருந்தது. அதனால் தின்று சிவக்கும் பெண்ணே என்றான். அவளை அவன் அழைத்ததின் நோக்கம், நெல்லை ஒரு பக்கத்தில் ஆடு மேய்கிறது. அதை விரட்டு என்று கூறத்தான்.----நெல் பின்னால் சோறாகப் போகிறது. ஆடு நாம் தின்னும் கறி ஆகப் போகிறது.அதைத்தான் சோற்றைக் கறி தின்கிறது என்றான்.

அடுத்தாற்போல் அவள் கூறியதைப் பார்ப்போம். மரத்தால் செய்த மிதியடியைப் போட்டுக்கொண்டு வெற்றிலையை வாயில் குதப்பிக்கொண்டிந்த அவனைப் பார்த்து, " பட்ட மரத்தின் மேலே ஏறிப் பச்சிலை தின்னும் மாடே" என்றாள்.தன்னிடம் சாதுர்யமாகப் பேசியவன் திருமணம் ஆனவரா என்று அறியத்தான் " கட்டிய மாடென்றால் இங்கே வரரதே என்றும் கட்டாத மாடென்றால் வா " என்றும் கூறினாள்.

No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்